நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளார் - பிரசாந்த் கிஷோர்


நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளார் - பிரசாந்த் கிஷோர்
x

நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

முழு நேர அரசியலில் ஈடுபடும் நோக்கில் பீகாரில் பாதயாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனாதள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதாவுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜனதாவுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளார்' என்று தெரிவித்தார்.

இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை என கூறிய அவர், தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜனதாவுக்கு சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும், அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்து உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற கருத்துகளை அவர் கூறுவதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி தெரிவித்தார்.


Next Story