அரசியல் கட்சிகளுக்கு பணியாற்ற போவதில்லை - பிரசாந்த் கிஷோர் அதிரடி


அரசியல் கட்சிகளுக்கு பணியாற்ற போவதில்லை  - பிரசாந்த் கிஷோர் அதிரடி
x

இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் தாம் பணியாற்ற போவதில்லை என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பாட்னா,

பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், 'ஐ-பேக்' என்ற நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் பல்வேறு வியூகங்களை அமைத்து கொடுத்து வருகிறார். பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை வெற்றி மகுடம் சூட வைத்ததில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். இதற்கிடையே பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். அந்த கட்சியில் தேசிய துணைத்தலைவர் பதவியை பெற்றிருந்த அவர், பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினார்.

இந்தநிலையில், பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்ற திட்டமிட்டுள்ளேன். இனிமேல் எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்ற மாட்டேன்.பீகாரில் 3,000 கி.மீ நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை பற்றி கருத்து தெரிவித்த அவர்,

"இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் குஜராத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலோ காங்கிரஸ் தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.


Next Story