'ராமர் கோவில் வருகிறது, ராமராஜ்யம்தான் இல்லை': பிரவீன் தொகாடியா


ராமர் கோவில் வருகிறது, ராமராஜ்யம்தான் இல்லை: பிரவீன் தொகாடியா
x

நமது நாடு வளம்பெற, அனைத்து இந்துக்களும் இழந்த வளத்தை மீட்டெடுக்க, அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரவீன் தொகாடியா கூறினார்.

அமேதி,

ராஷ்டிரிய இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, உத்தரபிரதேச மாநிலம், அமேதி பகுதியில் உள்ள புரேராம்தீன் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அயோத்தியில் ராமர் கோவில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வந்திருக்க வேண்டிய ராமராஜ்யத்தைத்தான் எங்கும் பார்க்க முடியவில்லை.

நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வீடுகளைப் பெற வேண்டும், அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நமது நாடு வளம்பெற, அனைத்து இந்துக்களும் இழந்த வளத்தை மீட்டெடுக்க, அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story