செல்போனில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தற்கொலை..!


செல்போனில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தற்கொலை..!
x

செல்போனில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாக்ராஜ்,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்போனில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ், கர்னல்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரகுநாத் பிரசாத் குப்தா என்பவர் தன்னுடைய இரண்டு மகன்களுடன் கர்னல்கஞ்ச் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். 9-ம் வகுப்பு படித்து வந்த அவரது இளைய மகன், பெரும்பாலான நேரத்தை செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் கழித்து வந்ததால், சிறுவனின் படிப்பு பாதித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரகுநாத், செல்போனில் கேம் விளையாடியதற்காக சிறுவனை திட்டியுள்ளார். இதையடுத்து சிறுவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளான். காலையில், ரகுநாத் கதவைத் தட்டியுள்ளார். சிறுவன் பதிலளிக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளான்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story