திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் கர்ப்பிணி காதலியை அடித்துக்கொன்ற காதலன்
காதலில் கர்பமான நிலையில் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனை வற்புறுத்தியுள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் ஹல்டியா கிராமத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே, அந்த இளம்பெண் சமீபத்தில் கர்ப்பமாகியுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கர்ப்பத்திற்கு காரணமான காதலனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், காதலியை திருமணம் செய்யாமல் காதலன் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் கர்ப்பிணி காதலி நேற்று முன் தினம் இரவு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காதலனி கர்ப்பிணி காதலியை அடித்துக்கொன்றுள்ளார்.
கர்ப்பிணி காதலியை கொலை செய்த இளைஞன் பின்னர் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.