உலகம் ஆகச் சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது - மகாராணி எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்


உலகம் ஆகச் சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது - மகாராணி எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
x

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும்.

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவால், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழிநடத்தியதிலிருந்து ஒரு சகாப்தம் கடந்துவிட்டது. இங்கிலாந்து மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, மகாராணி எலிசபெத் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story