ஜனாதிபதி தேர்தல்: முதல் நாளிலேயே 11 பேர் வேட்பு மனு தாக்கல்


ஜனாதிபதி தேர்தல்: முதல் நாளிலேயே 11 பேர் வேட்பு மனு தாக்கல்
x

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை, ஓட்டு போடத் தகுதியுள்ள, 50 பேர் முன்மொழிய வேண்டும்; மேலும், 50 பேர் வழி மொழிய வேண்டும்

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் இன்று துவங்கியது. ஜூன் 29 ஆம் தேதி வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் துவங்கிய முதல் நாளே 11 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி தாக்கல் செய்ததால் இதில் ஒருவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்த நபர் ஒருவரின் லாலு பிரசாத் யாதவ் என்ற சுவாரசிய தகவலும் கிடைத்துள்ளது. இன்று மனு தாக்கல் செய்த நபர்கள் மராட்டியம், பீகார், தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை, ஓட்டு போடத் தகுதியுள்ள, 50 பேர் முன்மொழிய வேண்டும்; மேலும், 50 பேர் வழி மொழிய வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,க்கள், சட்டசபைகளின் உறுப்பினர்கள் ஓட்டளிக்கலாம்.


Next Story