ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நெதர்லாந்து ராணி சந்திப்பு...!
ஜனாதிபதி திரவுபதி முர்வை நெதர்லாந்தின் ராணி மாக்சிமா இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்வை நெதர்லாந்தின் ராணி மாக்சிமா இன்று சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில், நெதர்லாந்தின் ராணி மாக்சிமா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். ராணி மாக்சிமாவை வரவேற்ற ஜனாதிபதி, இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் நெதர்லாந்திற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் அன்புடன் நினைவுகூறப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, இந்தியா-நெதர்லாந்து மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்ட 'தண்ணீர் மீதான மூலோபாய கூட்டாண்மை' மூலம் இருதரப்பு உறவுகளும் சில ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களில் வலுவடைந்து வருவதாக கூறினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.