ஜனாதிபதி தேர்தல் - 2ம் சுற்று முடிவு : திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை


ஜனாதிபதி தேர்தல் - 2ம் சுற்று முடிவு : திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை
x
தினத்தந்தி 21 July 2022 12:20 PM GMT (Updated: 21 July 2022 12:43 PM GMT)

2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்

. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணூம் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது.அதன்படி திரௌபதி முர்மு - 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா- 1,89,876 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதனால் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.இருவருக்கும் 2,93,423 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.


Next Story