ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா மட்டுமே போட்டி..!!


ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா மட்டுமே போட்டி..!!
x

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா மட்டுமே போட்டியிடுகின்றனர். மீதமுள்ள அனைவரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 94 பேர் 115 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்யாத 107 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா ஆகிய இருவரின் தலா 4 தொகுப்பு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்த தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் நேற்று ஆகும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டில் நேற்று மாலையில் வெளியிடப்பட்டது. அதன்படி திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா மட்டுமே வேட்பாளர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் இருவருக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வருகிற 18-ந் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்றத்தின் 63-வது அறையிலும், மாநில சட்டசபைகளின் அறிவிக்கப்பட்ட அறைகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் என மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story