ஜனாதிபதி மாளிகை - பார்வையாளர்களுக்கு நாளை முதல் அனுமதியில்லை


ஜனாதிபதி மாளிகை - பார்வையாளர்களுக்கு நாளை முதல் அனுமதியில்லை
x

ஜனாதிபதி மாளிகையில் பார்வையாளர்களுக்கு நாளை முதல் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும்.

ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் செப்.10 ஆம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி இல்லம் அறிவித்துள்ளது. 10-ம் தேதிக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஜி20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story