சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 சதவிகிதமான பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இளைஞர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதிக்காக நான் பெருமைப்படுகிறேன். இளைஞர்களின் வெற்றியில் மகத்தான பங்களிப்பை ஆற்றிய அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் நான் வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Related Tags :
Next Story