ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி பயணம்


ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி பயணம்
x

கோப்புப்படம் PTI

தினத்தந்தி 25 Jun 2022 9:50 AM IST (Updated: 25 Jun 2022 10:11 AM IST)
t-max-icont-min-icon

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜெர்மனி செல்கிறார்

புதுடெல்லி,

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் இன்று ஜெர்மனி செல்கிறார் .வரும் ஜீன் 26,27 ஆகிய தேதிகளில் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது .இந்த கூட்டதில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது .

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். என கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story