சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு; எடியூரப்பா பேட்டி


சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு; எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா விமான நிலையம் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடக்க உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் எடியூரப்பா ெதரிவித்துள்ளார்.

சிவமொக்கா:

எடியூரப்பா ஆய்வு

மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் சோகானே பகுதியில் விமான நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் நேற்று சோகானே விமான நிலைய பகுதிக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அப்போது அவர் விமான நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு ெசய்தார்.

பின்னா் அவா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிப்ரவரி 27-ந்தேதி திறப்பு

நாட்டிலேயே மிக குறைந்த ெசலவில் ரூ.449.22 கோடியில் மிக நவீனமுறையில் சிவமொக்கா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் 3 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பணிகள் கூடிய விரைவில் முடிந்துவிடும். இந்த விமான நிலைய திறப்பு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. இதில் கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்துக்கு அடுத்து மிகவும் நவீன முறையில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இரவு நேரங்களிலும் விமானங்கள் தரையிறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் அனைத்து வசதிகளும் ெசய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

ஒரே ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதே ஆட்சியில் விமான நிலையம் திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விமான நிலைய பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிவமொக்கா மக்களின் நீண்டநாள் கனவு நனவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா, கலெக்டர் செல்வமணி, போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story