5ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!


5ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!
x

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை ,பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது.


Related Tags :
Next Story