விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே, பிரதமர் மோடியின் கனவு; மத்திய மந்திரி ஷோபா பேச்சு


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே, பிரதமர் மோடியின் கனவு; மத்திய மந்திரி ஷோபா பேச்சு
x

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமர் மோடியின் கனவு என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்துள்ளார்.

மங்களூரு;

மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரெயில் பாதை

மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கரந்தலாஜே உடுப்பிக்கு நேற்றுமுன்தினம் வந்தார். இதையடுத்து அவர், உடுப்பி டவுன் இந்திராலி ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கப்பட்ட 740 கி.மீ. தூரம் கொங்கன் ரெயில் பாதையை தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த திட்டம் கொங்கன் பகுதி மக்களின் நீண்டநாள் கனவு. கொங்கன் ரெயில்வே கடலோரப் பகுதி மக்களின் உயிர்நாடியாகும். கொங்கன் ரெயில்வேயின் பெயர் வரும்போது மறைந்த முன்னாள் மத்திய மந்திரி​ஜார்ஜ் பெர்னாண்டசை நினைவுக்கூர விரும்புகிறேன். மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரெயில்வே திட்டம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே முடிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மின்மயமாக்கல் என்பது குறைந்த எரிப்பொருள் நுகர்வுடன் கூடிய மாசு இல்லாத போக்குவரத்து ஆகும். இந்த வழித்தடத்தில் சுமார் 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 10 சரக்கு ரயில்கள் பயணித்து வருகின்றன.

பிரதமர் மோடியின் கனவு

ஒட்டுமொத்த ரெயில்வேயையும் ஒரே நெட்வொர்க்கில் கொண்டுவர பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். சாலை, ரெயில் போக்குவரத்து வணிகம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாகும்.

வாக்குறுதி அளித்தப்படி பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதேபோல் அனைத்து துறைகளுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமர் மோடியின் கனவு. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 25 சதவீதம் உயர்த்துவது ஆகும்.இவ்வாறு அவர் பேசினார்.

இவருடன் கொங்கன் ெரயில்வேயின் கார்வார் மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

1 More update

Next Story