சத் பூஜை: "அனைவரின் வாழ்வும் என்றும் ஒளிமயமாக இருக்கட்டும்" - பிரதமர் மோடி வாழ்த்து!


சத் பூஜை: அனைவரின் வாழ்வும் என்றும் ஒளிமயமாக இருக்கட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து!
x

'சத் பூஜை' எனப்படும் பூஜை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமானது.

புதுடெல்லி,

சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சத் பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று மாலை மறையும் சூரியனையும், நாளை காலை உதயசூரியனையும் கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

சத் பண்டிகை பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.'சத் பூஜை' எனப்படும் பூஜை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்வார்கள்.

இந்நிலையில், சத் பூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் பண்டிகை சூரியனையும் இயற்கையையும் வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இறைவன் ஆசீர்வாதத்துடன் அனைவரின் வாழ்வும் என்றும் ஒளிமயமாக இருக்கட்டும், இதுவே விருப்பம் என பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story