காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் சிறப்பானதாக அமையட்டும்: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் சிறப்பானதாக அமையட்டும்: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி இன்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

காங்கிரஸ் தலைவர் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடியும் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமைய எனது வாழ்த்துக்கள். வரவிருக்கும் காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் அவருக்கு சிறப்பானதாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Related Tags :
Next Story