பிபோர்ஜாய் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை


பிபோர்ஜாய் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
x

பிபோர்ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணி அளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது. இப்புயல் ஜூன் 15-ந் தேதியன்று குஜராத்- பாகிஸ்தானின் கராச்சியை ஒட்டி கரையை கடக்க உள்ளது

பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிபோர்ஜாய் என்ற பெயரை தந்தது வங்கதேசம். இதற்கு அர்த்தம் பேராபத்து என பெயர்.

இந்தநிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர புயலான பிபோர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 1 மணி அளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Related Tags :
Next Story