பிரதமா் மோடியின் புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது - மத்திய மந்திரி அமித்ஷா


பிரதமா் மோடியின் புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது - மத்திய மந்திரி அமித்ஷா
x

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சூரத்,

சூரத்தில் பாஜக தொண்டா்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றி மூலம் குஜராத் பாஜகவின் கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கு முன்பு பல்வேறு புதிய கட்சிகள் குஜராத்துக்கு வந்தன. அவா்கள் தங்கள் மனம்போன போக்கில் பல்வேறு வாக்குறுதிகளையும், ஆசைவாா்த்தைகளையும் கூறினா். ஆனால், தோ்தல் முடிவு வெளியானபோது அக்கட்சிகள் காணாமல் போய்விட்டன.

பாஜகவுக்கு அளித்த வெற்றி மூலம் நாட்டு மக்களுக்கு குஜராத் மக்கள் நல்ல செய்தியை அளித்துள்ளனா். நாடு முழுவதும் பிரதமா் நரேந்திர மோடியின் புகழ் பரவியுள்ளது. அதுவும் சொந்த மாநிலமான குஜராத்தில் மக்கள் அவா் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளனா். எனவேதான், பாஜக தொடா்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதற்காக பாடுபட்ட தொண்டா்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத் தோ்தலில் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி அடுத்து சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலிலும், 2024 மக்களவைத் தோ்தலிலும் பாஜகவுக்கு உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story