பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் வெளியான பே-எம்.எல்.ஏ. போஸ்டரால் பரபரப்பு
பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ புகைப்படத்துடன் வெளியான பே எம்.எல்.ஏ போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாசன்:
பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரசார் பே-சி.எம். என்ற போஸ்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹாசன் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரீத்தம் கவுடா மீது கமிஷன் குற்றச்சாட்டி கியூ-ஆர் கோடுடன் அவரது புகைப்படம் அச்சடித்து பே-எம்.எல்.ஏ. என்ற போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் 50 சதவீதம் கமிஷன் வாங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சூரஜ் ரேவண்ணா என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பா.ஜனதா பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பா.ஜனதா தரப்பில் ஹாசன் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதய் பாஸ்கரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.