பழங்குடியின பெண் மீது தாக்குதல்- பாஜக மீது பிரியங்கா காந்தி தாக்கு
பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் சொத்துத் தகராறில் பழங்குடியினப் பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தின் மால் பகுதியில் தலித் இளைஞர் ஒருவர், கட்டிலின் கீழ் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. தலித், ஆதிவாசிகளின் பெயர்களை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தும் பாஜக, அவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் சம்பவங்கள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்" என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story