மது அருந்திய அரசு பஸ் டிரைவர்களை கண்டறியும் கருவி கொள்முதல்; கர்நாடக அரசு அனுமதி


மது அருந்திய அரசு பஸ் டிரைவர்களை கண்டறியும் கருவி கொள்முதல்; கர்நாடக அரசு அனுமதி
x

மது அருந்திய அரசு பஸ் டிரைவர்களை கண்டறியும் கருவி கொள்முதல் செய்ய கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர்கள் மதுபானம் அருந்துவிட்டு பஸ்களை ஓட்டினால் விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் டிரைவர்கள் பணி நேரத்தில் மதுபானம் அருந்தி இருந்தால் அதை முன்கூட்டியே கண்டறியும் 'பிரீத் அனலைசர்' (மூச்சு காற்று ஆய்வு) கருவிகளை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.), பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி.) உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு மொத்தம் 347 பிரீத் அனலைசர் கருவிகள் வாங்கப்படுகிறது. ஒரு கருவியின் விலை ரூ.60 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் பணிக்கு வரும் டிரைவர்கள் மது அருந்தியுள்ளனரா? என்பது முன்கூட்டியே சோதித்து கண்டறிய முடியும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story