கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி:ஆளுங்கட்சி பிரமுகர் மனைவியை நியமிக்க தடை - கவர்னர் அதிரடி


கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி:ஆளுங்கட்சி பிரமுகர் மனைவியை நியமிக்க தடை - கவர்னர் அதிரடி
x

Image Courtesy: PTI 

தினத்தந்தி 20 Aug 2022 1:05 AM GMT (Updated: 20 Aug 2022 1:06 AM GMT)

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாள துறையில் இணை பேராசிரியராக பிரியா வர்கீஸ் என்ற பெண்மணியை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாள துறையில் இணை பேராசிரியராக பிரியா வர்கீஸ் என்ற பெண்மணியை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.அவர், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகரும், முதல்-மந்திரியின் செயலாளருமான கே.கே.ராகேஷின் மனைவி ஆவார்.

அவர் நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தபோதிலும், ஆராய்ச்சியில் குறைவான மதிப்பெண்கள்தான் பெற்றிருந்தார். அவரது நியமனத்துக்கு பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னர் ஆரிப் முகமதுகான் தடை விதித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்தது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இதுகுறித்து கவர்னர் ஆரிப் முகமதுகான் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தகுதி இல்லாத ஒருவர், முதல்-மந்திரியின் செயலாளருடைய மனைவி என்பதற்காக நியமிக்கப்படுகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. குடும்பரீதியாக அளிக்கப்படும் சலுகை. இங்கு விதிமுறையை மீறுவதே வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story