செல்போன் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,770 கோடி ஜப்தி செய்ய தடை:ஐகோர்ட்டு உத்தரவு
செல்போன் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,770 கோடி ஜப்தி செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு, டிச.23-
சியோமி செல்போன் நிறுவனம் முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அந்த நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறி, வரி ஏய்ப்பு செய்ததுடன், தங்களுக்கு கிடைத்த லாபத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தது. அந்த நிறுவனம் ரூ.3,770 கோடி முறைகேடு செய்திருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.3,770 கோடியை 6 மாதத்திற்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் ஜப்தி செய்தார்கள்.
இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில், அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, சியோமி நிறுவனத்திடம் இருந்து வருமான வரித்துறை ரூ.3,770 கோடியை ஜப்தி செய்ததற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.