வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி


வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை  முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 8:55 AM GMT)

வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மைசூரு

முதல்-மந்திரி சித்தராமையா

மைசூரு டவுன் நஜர்பாத் பகுதியில் போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. இந்த அகாடமியில் 69-வது ஆண்டு வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், மைசூரு நகரை பிளாஸ்டிக் பயன்படுத்தாத நகரமாக அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வன்னிய ஜீவி (வன விலங்குகள்) சப்தாகம் என்றால் காடுகள் மற்றும் காட்டு விலங்குகளை காப்பாற்றுவது மற்றும் பாதுகாப்பது என்று அர்த்தம்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் கூட, காடுகள் இருந்தால் மட்டும் தான் நாடு. நாட்டின் மக்கள், விலங்குகள் வாழ முடியும். இயற்கையாக 33 சதவீதம் வனப்பகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது 22 சதவீதம் வரை மட்டும் வனப்பகுதி உள்ளது.

வனவிலங்குகள்

மனிதர்களால் வனப்பகுதிகள் நாசமாகி, அங்கு உணவு கிடைக்காமல் விலங்குகள் ஊருக்குள் நுழைகிறது. கர்நாடகத்தில் 6, ஆயிரத்து 395 காட்டு யானைகள் உள்ளன. யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே நமது மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

563 புலிகள் வனப்பகுதியில் வாழ்கின்றன. ரெயில் அடிப்பட்டு வனவிலங்குகள் இறப்பதை தடுக்க 312 கிலோ மீட்டர் தூரம் வரை வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைகிறது. இதனால் வனப்பகுதியிலேயே உணவு மற்றும் தண்ணீர் குடிக்க ஏற்பாடுகள் செய்தால் விலங்குகள் ஊருக்குள் வராது. அதற்கான வேலைகளை வனத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும். வனப்பகுதியை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனப்பகுதி மீது ஆர்வம்

மேற்கு பகுதி வனப்பிரதேசம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இயற்கையால் கொண்ட அடர்ந்த வனப்பிரதேசம் ஆகி உள்ளது, இங்கு மருத்துவ குணம் உள்ள மர, செடி, கொடிகள் மற்றும் விலங்குகள் உள்ளன. அதனால் வனத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு வனப்பகுதி மீது ஆர்வம், அக்கறை இருக்க வேண்டும்.

வனத்தை நேசித்து வேலை செய்ய வேண்டும். வனப்பகுதிகளில் காலியான இடங்களில் செடிகளை நட்டு வளர்க்க வேண்டும்.

இதன் மூலம் வனப்பகுதி அதிகரிக்கும். மரங்கள் வளர்ப்பு மூலம் தான் வனப்பகுதியை காக்க முடியும். வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு முதல்-மந்திரி கூறினார்.

நிகழ்ச்சியில் வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி. மகாதேவப்பா, கால்நடைத்துறை மந்திரி கே. வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இல்லத்தில் தங்கினார்

மைசூருவில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு முதல்-மந்திரி சித்தராமையா ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் தங்கினார். அப்போது, முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.

அந்த கடையின் உரிமையாளர் உரிமம் பெற்று உள்ளாரா? அந்த குடோனில் எத்தனை கோடி ரூபாய் விலை மதிப்புள்ள பட்டாசுகள் உள்ளன. அங்கு பட்டாசுகள் மட்டும் உள்ளதா? அல்லது வெடிகுண்டு ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். சம்பவம் காரணமாக பட்டாசு கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வறட்சி ஆய்வு

கர்நாடகத்தில் வறட்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்த வந்திருக்கும் மத்திய குழுவினர் மீது விவசாயிகள் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர்.

மத்திய ஆய்வுக் குழுவினர்கள் பாரபட்சம் இல்லாமல் சரி சமமாக ஆய்வு நடத்தி, வறட்சி பணிகள் கணக்கெடுத்து, அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.

அப்படி செய்தால் மட்டும் தான் மாநில விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்கும். இது சம்பந்தமாக நான் முன்கூட்டியே ஆய்வுக் குழுவினர்களிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story