பாக்கு விவசாயிகளின் நலனை காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது- குமாரசாமி வலியுறுத்தல்


பாக்கு விவசாயிகளின் நலனை காக்கும்  பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது-  குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாக்கு விவசாயிகளின் நலனை காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு: பாக்கு விவசாயிகளின் நலனை காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாக்கு சாகுபடி

கர்நாடகத்தில் பாக்கு மரங்களின் இலைகளில் இலைசுக்கி நோய் பரவியுள்ளது. இதனால் பாக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் எந்த உதவியும் செய்யவில்லை. விவசாயிகளை இந்த அரசுகள் எந்த அளவுக்கு புறக்கணிக்கிறது என்பதற்கு பாக்கு விவசாயிகளின் கஷ்டங்களே சாட்சி. கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், ஹாசன், குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

கர்நாடகத்தில் தான் அதிகளவில் பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் பாக்கு விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. பாக்கு சாகுபடி செய்வது என்பது கத்தி மீது நடப்பது போன்றது ஆகும். மழை வெள்ளம், வறட்சி நோய் பரவல் போன்ற காரணங்களால் அந்த விவசாயிகள் படும் பாடு சொல்லி மாளாது. அந்த விவசாயிகளுக்கு நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு குறைந்த விலையில் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லா உதவிகள்

பாக்கு விளைச்சல் பாதிப்புக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். நேபாளத்தில் இருந்து 17 ஆயிரம் டன் பச்சை பாக்குகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நமது பாக்கு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த பாக்கு விவசாயிகளின் நலனை காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. அந்த விவசாயிகளுக்கு எல்லா ரீதியான உதவிகளையும் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story