மராத்தி படத்தை கர்நாடகத்தில் திரையிட கூடாது; கன்னட அமைப்பினர் எச்சரிக்கை
எல்லை பிரச்சினை முடியும் வரை மராத்தி படத்தை கர்நாடகத்தில் திரையிடக்கூடாது என்று கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு:
மராத்தியில் உருவாகி உள்ள 'பாய்ஸ்-3' படத்தில் கர்நாடக-மராட்டிய எல்லை பிரச்சினை குறித்து இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் எல்லை பிரச்சினையை தெரியப்படுத்தி உள்ள மராத்தி படத்தை கர்நாடகத்தில் திரையிடக்கூடாது என்று கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கன்னட சலுவளி கட்சியினர் கூறுகையில், கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக மராத்தி படமான பாய்ஸ்-3 படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கர்நாடகத்துக்கு எதிரான கருத்துகள் உள்ளன. இதனால் பாய்ஸ்-3 படத்தை கர்நாடகத்தில் திரையிட கூடாது. மீறி வெளியிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story