லஞ்ச வழக்கில் கைதான பி.டி.ஏ. உதவி என்ஜினீயரின் ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


லஞ்ச வழக்கில் கைதான பி.டி.ஏ. உதவி என்ஜினீயரின் ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

லஞ்ச வழக்கில் கைதான பி.டி.ஏ. உதவி என்ஜினீயரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் (பி.டி.ஏ) உதவி என்ஜினீயராக பணியாற்றியவர் கே.டி.ராஜூ. இந்த நிலையில் நில வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க ராஜூ, நிலத்தின் உரிமையாளரிடம் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டு இருந்தார். மேலும் ரூ.5 லட்சத்தை முன்பணமாகவும் பெற்று இருந்தார். இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய ராஜூவை, ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பெங்களூரு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு ராஜூ மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் ராஜூ மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன் கூறும்போது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடப்பது இல்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் ராஜூவின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story