பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது
சிவமொக்காவில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது.
சிவமெக்கா-
கர்நாடகாவில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் கன்னட மொழி தேர்வு நடைபெற்றது. சிவமொக்கா மாவட்டத்திலும் பி.யூ.சி. 2-ம் பொதுத்தேர்வு நேற்று தொடங்கி நடந்தது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினார்கள். தேர்வையொட்டி தேர்வு மையங்களை சுற்றி 100 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தேர்வு அறைகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சிவமொக்கா நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள கஸ்தூரிபா கல்லூரியில் தேர்வு எழுத நேற்று காலை நூற்றுக்கணக்கான மாணவிகள் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவமொக்காவில் எந்த அசம்பாவிதங்கள் இன்றி தேர்வு அமைதியாக நடந்தது.