புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்


புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்
x

புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள எ.எப்.டி மைதானத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அப்பணிகள் முடியும் வரை புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள எ.எப்.டி மைதானத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் சாலையில் உள்ள தியாகி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து ரெயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழித்தட பேருந்துகளும் நாளை முதல் எ.எப்.டி மைதானத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story