புதுச்சேரி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மின்தடையால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்..!
புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளால் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலுக்கான ஒப்பந்தம் கோரியதை எதிர்த்து, மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளால் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அந்தந்த தொகுதியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட முயற்சியால், மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story