புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு

கோப்புப்படம்
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






