உணவு ஆர்டர் செய்த இளம் பெண் ; வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த டெலிவரி ஊழியர்
உணவு டெலிவரி செய்த பின் 'நன்றி' என்று கூறி அந்த இளம்பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார் டெலிவரி ஊழியர்
புனே:
மராட்டிய மாநிலம் புனேவின் யெவலேவாடி பகுதியில் கடந்த 17 ந்தேதி ஒரு 19 வயது இளம் பெண் சோமாட்டோ மூலம் உணவு ஆர்டர் கொடுத்து உள்ளார்.
இரவு 9.30 மணியளவில் சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக் ( வயது 40) என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்று உள்ளார்.
உணவு டெலிவரி செய்த பின் 'நன்றி' என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார்.
மேலும் சிறுமியிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்ததும், அவர் பெண்ணை அருகில் இழுத்து துன்புறுத்தி உள்ளார்.
தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் அந்த சிறுமியிடம் தான் மாமாவைப் போன்றவர் என்றும், பெண்ணிற்கு ஏதாவது வேண்டுமானால் கேட்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டி பெண்ணை துன்புறுத்து உள்ளார். உடனடியாக அந்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து ரயீஸ் தப்பி ஓட முயன்றார், ஆனால் வீட்டுவசதி சங்கத்தைச் சேர்ந்த சிலர் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி 354 மற்றும் 354 ஏ பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.