பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் கண்டெடுப்பு

Image Courtesy : @BSF_Punjab
வயல் வெளியில் கிடந்த டிரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே உள்ள சான் கலன் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்ததாக எல்லை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது அங்குள்ள வயல் வெளியில் கிடந்த டிரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றினர். அது குவாட்காப்டர் வகையைச் சேர்ந்தது என்றும், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த டிரோனை அனுப்பியது யார் என்பது குறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






