பஞ்சாப்: இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை


பஞ்சாப்: இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம்; பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை
x

கோப்புப்படம்

பஞ்சாப்பில் இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ராஜதல் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் ஒன்று இருமுறை பறந்து சென்றுள்ளது. இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த ஆளில்லா விமானம் திரும்பி சென்றது.

இந்த நிலையில், பாதுகாப்பு படையினர் ஆளில்லா விமானம் ஒன்றை அந்த பகுதியில் பறக்க விட்டு தேடுதல் பணியை படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் 3 முறை அத்துமீறி நுழைந்துள்ளது. கடந்த மாதம், பஞ்சாப் அட்டாரி பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே வந்த ஆளில்லா விமானம் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பதான்கோட் எல்லைப்பகுதியில், கடந்த ஜீன் மாதம் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை விரட்டியடித்தனர்.


Next Story