பஞ்சாப்: லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் மந்திரி கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

பஞ்சாப்: லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் மந்திரி கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!
x

பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சாது சிங் தரம்சோட் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சாது சிங் தரம்சோட் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான சாது சிங் தரம்சோட் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அவரை இன்று கைது செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அவர் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தார். அவருடன், உதவியாளராகப் பணியாற்றிய உள்ளூர் பத்திரிகையாளர் கமல்ஜித் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் வன அதிகாரி குர்னாம்ப்ரீத் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஹம்மி ஆகியோரை கைது செய்தபோது, தரம்சோட்டுக்கு எதிரான பல ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்தது. ஹர்மிந்தர் சிங் ஹம்மி தரம்சோட்டிற்கு பெரும் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர் சாது சிங் தரம்சோட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பகவந்த் மான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எச்சரித்து வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story