பஞ்சாப்: காலிஸ்தான் விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமரீந்தர் சிங்


பஞ்சாப்: காலிஸ்தான் விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமரீந்தர் சிங்
x

காலிஸ்தான் விவகாரத்தில் பஞ்சாப் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர் உட்கட்சி மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

இதனையடுத்து, கடந்த மாதம் 19-ந் தேதி பாஜகவில் இணைந்தார். தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், காலிஸ்தான் விவகாரத்தில் பஞ்சாப் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பதவிக்காலத்தில் நான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததால் காலிஸ்தான் கோஷங்கள் எழுப்பப்படவில்லை.

சட்டம் மற்றும் ஒழுங்கு மாநில அரசாங்கத்திற்கு உட்பட்டது. அவர்கள் (பஞ்சாப் அரசு) எதுவும் செய்யவில்லை. பாஜக, பஞ்சாப் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்தார்.


Next Story