பஞ்சாப்: சுற்றுலா வந்த இடத்தில் கொள்ளை முயற்சி; ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி


பஞ்சாப்:  சுற்றுலா வந்த இடத்தில் கொள்ளை முயற்சி; ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி
x

பஞ்சாப்பில் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் தப்பிக்க முயன்ற சட்ட கல்லூரி மாணவி ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பலியானார்.


அமிர்தசரஸ்,


சிக்கிமை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர் பஞ்சாப்புக்கு சுற்றுலா வந்துள்ளார். 20 வயது நெருங்கிய அவர், குடியரசு தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை ஒட்டி அமைந்த அட்டாரி-வாகா எல்லை பகுதியில் நடந்த கொடியிறக்க நிகழ்ச்சியை காணும் ஆவலுடன் வந்துள்ளார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் பஞ்சாப்பை சுற்றி பார்த்து உள்ளார். அமிர்தசரஸ் நகரில் இருந்து அவர் தனது இருப்பிடத்திற்கு ஆட்டோ ஒன்றில் திரும்பி உள்ளார். அவரை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

இதனை அவர் கவனிக்கவில்லை. இந்நிலையில், ஆட்டோவில் இருந்த மாணவியிடம் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க பைக்கில் வந்த அந்த மர்ம நபர்கள் முயன்று உள்ளனர். இதனை அவர் தடுத்து உள்ளார். இதில், ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த அவர் உயிரிழந்து விட்டார்.

கொடியிறக்க நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பஞ்சாப்புக்கு சுற்றுலா சென்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழக்க நேரிட்டது அந்த பகுதியில் வசிப்போர் இடையே சோகம் ஏற்படுத்தி உள்ளது.


Next Story