தேசத்துக்கு காதி - தேசியக் கொடிக்கு சீன பாலியஸ்டர் : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்
பிரதமரின் வார்த்தைகளும் செயல்களும் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை.என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர்.
காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி .ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
தேசத்துக்காக கதர். ஆனால் தேசியக் கொடிக்கு சீனா பாலியஸ்டர்.எப்போதும் போல, பிரதமரின் வார்த்தைகளும் செயல்களும் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை.என அந்த அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.