பொங்கிய யமுனை.. அடுத்த 2 நாட்களில் தலைநகருக்கு வரப்போகும் அடுத்த ஆபத்து..!


பொங்கிய யமுனை.. அடுத்த 2 நாட்களில் தலைநகருக்கு வரப்போகும் அடுத்த ஆபத்து..!
x

மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

புதுடெல்லி,

பருவமழையின் கோர தாண்டவத்தில் வட மாநிலங்கள் சிக்கித்தவிக்கின்றன. அதிலும், தலைநகர் டெல்லி வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் தலைநகர் டெல்லியில், போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

கனமழை தொடங்கியதுமுதல் சுமார் 140 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல சாலைகளில் பல சொகுசு கார்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. யமுனை ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை.

இதனிடையே, சனிக்கிழமை வரை டெல்லியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story