காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி சந்திப்பு..!


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி சந்திப்பு..!
x

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார்.

புதுடெல்லி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. இதற்கிடையில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் தனித்தனியாக டெல்லி சென்றுள்ளது கர்நாட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார். கர்நாடக முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி கார்கேவை சந்திதுள்ளார்.


Next Story