ராகுல் காந்தி அரசியலில் தீவிரம் காட்டவில்லை - பாரதிய ராஷ்டிர சமிதி கடும் தாக்கு


ராகுல் காந்தி அரசியலில் தீவிரம் காட்டவில்லை - பாரதிய ராஷ்டிர சமிதி கடும் தாக்கு
x

ராகுல் காந்தி அரசியலில் தீவிரம் காட்டவில்லை என்று பாரதிய ராஷ்டிர சமிதி கூறியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதியின் செயல் தலைவரும், மாநில மந்திரியுமான கே.டி.ராமாராவ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ராகுல் காந்தி அரசியலில் தீவிரம் காட்டவில்லை. இதற்கு சிறந்த உதாரணம், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டதுதான். தற்போது கூட அரசியல் செய்வதற்கு பதிலாக அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே அவர் அரசியல் கட்சி நடத்துவதற்கு பதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கலாம்' எனக்கூறினார்.

கர்நாடகாவில் பா.ஜனதாவின் திறமையின்மை மற்றும் ஊழல் காரணமாகவே காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கூறிய கே.டி.ராமாராவ், இந்த வெற்றி தெலுங்கானாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

1 More update

Next Story