"நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது" - ராகுல்காந்தி


நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது - ராகுல்காந்தி
x

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ராஜபாதை (கடமை பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கிறார். திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம், 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் மோடி அல்ல.. எனவே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது.. ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் வீண் திட்டம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.


Next Story