ராகுல் காந்தி ராணுவத்திடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - அரியானா முதல்-மந்திரி


ராகுல் காந்தி ராணுவத்திடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - அரியானா முதல்-மந்திரி
x

சீன விவகாரம் குறித்த கருத்துக்கு ராகுல் காந்தி ராணுவத்திடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

ராஜஸ்தானில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சீனா போருக்கு தயாராகும்போது இந்தியா தூங்கிக்கொண்டிருக்கிறது. அச்சுறுத்தலை மத்திய அரசு தவிர்த்து வருகிறது. 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துக்கொண்டது.

20 இந்திய வீரர்களை கொன்றுள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் நமது வீரர்களை சீனா தாக்கியுள்ளது. என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ராகுல் காந்தி மீண்டும் ஒரு முதிர்ச்சியற்ற அறிக்கையை அளித்து, நாட்டிற்கும் அதன் உணர்வுகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

சீனாவுக்கு நமது ராணுவ வீரர்கள் வலுவான பதிலடி கொடுத்து வரும் வேளையில், ராகுல் காந்தியின் இந்த கருத்து ராணுவம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் மன உறுதியை குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, முதலில் அவர் (ராகுல் காந்தி) ராணுவத்திடமும், நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூற விரும்புகிறேன்.

ராகுல் காந்தியும் அவரது கட்சியும் எந்த வகையான கேவலமான அரசியல் செய்தாலும், இந்த நாடு முழுவதும் வலிமையான தலைமையின் கீழ் ராணுவத்துடன் நிற்கிறது. ராணுவத்தினரின் துணிச்சலைப் பற்றி எப்போதும் பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story