ராகுல் காந்தி இன்று வயநாடு பயணம்; பொது கூட்டம், பேரணியில் கலந்து கொள்கிறார்


ராகுல் காந்தி இன்று வயநாடு பயணம்; பொது கூட்டம், பேரணியில் கலந்து கொள்கிறார்
x

எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்த நிலையில், எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி முதன்முறையாக 11-ந்தேதி (இன்று), பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிட்டு உள்ளார். மேலும் சாலை வழி பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story