காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் - ஏக்நாத் ஷிண்டே


காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் - ஏக்நாத் ஷிண்டே
x

காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:-

மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்து உள்ளார். வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன். பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

சாவர்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது. ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 'காவலாளியே திருடன் ' என கூறினார். அப்போது மக்கள் அவருக்கு தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுகொடுத்தனர்.

ராகுல் காந்தி வெளிநாட்டில், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பேசினார். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தி பாரதத்தை துண்டாடுதல் குறித்து பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு அவா் கூறியுள்ளார்.


Next Story