நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி


நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி
x

எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார். எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாளை ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story