தொங்கு பாலம் விபத்து: பலியானோருக்கு ராகுல்காந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் பலியானோருக்கு ராகுல்காந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
ஐதராபாத்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது 54-வது நாள் பாதயாத்திரையை மேற்கொண்டார். தெலுங்கானா மாநிலம் சாத்நகரில் இருந்து அவரும், இதர காங்கிரசாரும் நடக்கத் தொடங்கினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் என்பதால், அவரது உருவப்படத்துக்கு ராகுல்காந்தியும், மற்றவர்களும் அஞ்சலி செலுத்தினர். சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் என்பதால், அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலியானோருக்கு ராகுல்காந்தி உள்ளிட்டோர் 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story