ரெயில்வேயில் அதிரடி நடவடிக்கை: கடந்த 16 மாதங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 177 ஊழியர்கள் பணி நீக்கம்!


ரெயில்வேயில் அதிரடி நடவடிக்கை: கடந்த 16 மாதங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 177 ஊழியர்கள் பணி நீக்கம்!
x

ஜூலை 2021 முதல், மூன்று நாளைக்கு ஒரு பணியாளர் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, ஜூலை 2021 முதல், ஒரு நாளைக்கு மூன்று பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டு மூத்த அதிகாரிகளும் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் ஐதராபாத்தில் ரூ. 5 லட்சமும், ராஞ்சியில் மற்றொருவர் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கியும் பிடிபட்டவர்கள்.

வேலை செய்யாமல் வெறும் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரயில்வே துறையில் இடமில்லை என்று மந்திரி அஸ்விணி வைஷ்னவ் தெளிவுபடுத்தினார். அதன்படி ஜூலை 2021 முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின்கீழ், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், ஒரு ஊழல் அதிகாரி அல்லது செயலற்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். பயிற்சி சேவைகள் விதி 56(ஜெ)ஐப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

1 More update

Next Story